web log free
December 23, 2024

கோவில் வழக்கு தள்ளுபடி

கல்முனை வடக்கு உப  பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள  கோவில் தொடர்பான  வழக்கை,  கல்முனை நீதவான் நீதிமன்று, இன்று (02) தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை,  விசேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் விசாரித்து, மனுவிலுள்ள குறைபாடு காரணமாக வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக கோவில்  சார்பாக பிரதேச செயலாளர் ரி.ஜேஅதிசயராஜ் மன்றில் ஆஜராகியிருந்ததுடன்,  சட்டத்தரணிகளான ந.சிவரஞ்சித், மதிவதணன், ஆர்த்திகா ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

கல்முனை வடக்கு உப  பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டு வந்த இந்தக் கோவில், சட்ட ரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக,  கல்முனை மாநகர சபை மேயர் சார்பில் 2018ஆம் ஆண்டு  வழக்கு தாக்கல் செய்யப்பட்டு,  கல்முனை நீதவான்  நீதிமன்றத்தில்    வழக்கு நடைபெற்று வந்திருந்தது.

பல்வேறு வழக்கு தவணைகளின் பின்னர் இந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd