தேர்தல் திகதி மற்றும் பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (02) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் நாடாளுமன்ற கலைப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த 10 நாட்களாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையிலேயே இன்று குறித்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், நாளை (03) முக்கிய கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.