web log free
December 23, 2024

புதுமணப்பெண் மறுமணம் முடித்தவரால் படுகொலை

மட்டக்களப்பு - ஏறாவூர், ஐயங்கேணி, ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய  இளம் குடும்ப பெண் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தையடுத்து, அப்பெண்ணின் 27 வயதுடைய கணவனை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 09 நாள்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவன் - மனைவிக்கிடையே  நேற்றுப் பிற்பகல் சுமார் 3 மணியளவில் ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றிய நிலையில், மனைவியின் கழுத்தை கணவன் கயிற்றால்  இறுக்கியதனால் அப்பெண் உயிரிழந்துள்ளாரென, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கொழும்பு - ஒருகொடவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் ஏறாவூரில் ஏற்கெனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, குழந்தையொன்றின் தந்தையாவார்.

முதல் மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டே இரண்டாவதாக மேற்படி பெண்ணை மணமுடித்திருக்கின்றார் எனவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம், பிரேத பரிசோதனைக்காக  மட்டு. போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Last modified on Thursday, 04 June 2020 06:46
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd