web log free
July 01, 2025

தாரீக் மீது தாக்குதல்- 4 பொலிஸார் பணிநிறுத்தம்

ஆட்டிசம் குறைப்பாட்டுடனான 14 வயதான சிறுவன் தாரீக்கின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பொலிஸார் நால்வர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 

அளுத்கம - தர்கா நகர் பிரதேசத்திலுள்ள அம்பகஹ சந்தி பிரதேத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் காவலரணி கடமையில் ஈடுட்டிருந்த பொலிஸார் அச்சிறுவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 14 வயதான சிறுவனை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலான இன்று நேரடியான சென்று பார்வையிட்டார்.

ஆட்டிசம் குறைப்பாட்டுடனான தாரீகை  தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் நான்கு பொலிஸாரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd