web log free
December 23, 2024

பாடசாலைகள், பரீட்சைகள் திகதிகள் அறிவிப்பு

பாடசாலைகளை திறப்பது மற்றும் பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகளை கல்வியமைச்சர் டலஸ் அழகபெரும சற்றுமுன்னர் அறிவித்தார்.

எதிர்வரும் ஜுலை மாதம் 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் குறித்த தினத்தில் ஆரம்பமாகவுள்ளன.

ஜுலை 20, தரம் 10 மற்றும் 12 மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

தரம் 3 முதல் 9 வரையிலும் ஜுலை 27 ஆம் திகதியன்று பாடசாலைகள் திறக்கப்படும்

இதனை, கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன், நான்கு கட்டங்களாக பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக ஜுன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்தரப் பரீட்சை செப்டெம்பர் 7 இலிருந்து ஒக்டோபர் 2 வரையிலும் நடத்தப்படும். 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் 13ஆம் திகதி நடத்தப்படும் என்றும் கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். 

Last modified on Tuesday, 09 June 2020 09:47
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd