கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நுழைந்த குழுவொன்று ஊழியர்களுக்கு வழங்க வைத்திருந்த மேலதிக கொடுப்பனவு தொகை பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிசாரால் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியர் போல வேடமிட்டிருந்த சிலரே இப்பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.