நீதிமன்ற உத்தரவை மீறி கொழும்பில் அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடமுயன்ற பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ஜோர்ஜ் புளொயிட்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னிலை சோசலிச கட்சி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி சுமார் 100 பேர் வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் அல்லது அருகில் நடாத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றால் இடைக்காலத் தடையுத்தரவு நேற்று (08) பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.