இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் உருவ சிலையை நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதான நகரான நானு ஓயா நகரில் அமைக்க அனுமதியளிக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரனை எதிர்ப்புகள் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரேரனை நிறைவேற்றப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபையின் ஜூன் மாதத்திற்கான 27 வது சபை அமர்வு தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் (09) காலை நானுஓயா பிரதான காரியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது கூட்ட ஆரம்பத்தில் மறைந்த இ.தொ.கா தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமானுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து சபை கூட்ட நடவடிக்கையில் மறைந்த இ.தொ.கா தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு நானுஓயா நகரில் அவரின் உருவச்சிலையை நிர்மானிக்கவும், அதனை நுவரெலியா பிரதேச சபை ஊடாக நிர்மானிக்கவும் யோசனை தெரிவித்து பிரேரனையை சபை தவிசாளர் முன்வைப்பதாக தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டம் மற்றும் இன்றி நாட்டில் அனைத்து இன மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகவும் அமைச்சராகவும் அமரர் ஆறுமுகம் தொண்டமான் மதிப்பு பெற்றவர் என இதன்போது தவிசாளர் எடடுத்துரைத்தார்.