இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக அவருடைய மகன் ஜீவன் தொண்டமான் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்பு இலக்கம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று (09) வெளியிடப்பட்டது.
எனினும், அதில் ஜீவன் தொண்டமானின் பெயரோ, அவருக்குரிய விருப்பு இலக்கமோ இல்லை.
ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், ஆறுமுகன் தொண்டமானின் விருப்பிலக்கம் 3 ஆகும். அவர், நுவரெலியா மாவட்டத்தில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார் என கொழும்பு ஊடகமொன்று தன்னுடைய இ-இதழில் செய்தி வெளியிட்டுள்ளது.