கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த, அமெரிக்க பிரஜை, அமெரிக்க ராஜதந்திரி அல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்து்ளளார்.
அந்த நபரிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு இருந்தாலும் அவர் இந்தோ பசுப்பிக் கமொண்டோ ரெஜிமெண்டின் உறுப்பினர் ஆவார் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவர், தூதுவர் வரபிரசாத்துக்குள் ஒளிந்துகொண்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொள்வில்லை. அந்த நபர் யாரென்பதை தேடியறிந்து நாட்டுக்கு அறிவிக்க வேண்டியது அமெரிக்க தூதுவராலயத்தின் பணியாகும் என்றார்.
வெளிநாடுகளிலிருந்த நாட்டுக்குத் திரும்பும் ஒவ்வொரு நபரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனரா என்பது தொடர்பில் தேடியறிவது நாட்டின் பெறுப்பாகும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.