அதிரடியான பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1. 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி
2. 100 மாணவர்களுக்கு உட்பட்ட வகையில் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி
3. மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்களை திறக்க அனுமதி
ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 100 மாணவர்களுக்கு உட்பட்ட வகையில் மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தேசிய பூங்காக்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் மீள திறக்கப்படும் என அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.