யாழ்ப்பாணத்தில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அனலைத்தீவில் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்த கடற்படை வீரர்கள் இருவர், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த கடற்படையினர் இருவரின் நிலைமை மோசமடையவில்லை என்றும் அவ்விருவரும் தொடர்ச்சியாக தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.