web log free
December 23, 2024

கோத்தாவுக்கு எதிராக கோபாலிடம் த.மு.கூ முறைப்பாடு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.

கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான திகாம்பரம், ராதாகிருஷ்ணன் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோர் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பங்கேற்றிருந்தனர்.

இந்தியாவின் உதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, இந்தியாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இலங்கை அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தம் மற்றும் மிக முக்கியமான 19ஆவது திருத்தம் ஆகியவற்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் முழுமையாக திருத்துவதற்கு முயற்சிக்கிறது. இது பெரும் ஆபத்தானது என்றும் அந்நக் குழுவினர், இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவுக்கு அறிவித்துள்ளது

Last modified on Thursday, 11 June 2020 03:42
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd