தனிமைப்படுத்தல் சட்டத்தினை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது என ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.
ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்
தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பிலான அரசாங்கத்தின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது தருணம் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிநிகழ்வுகள் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளதுடன் ஆனால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது தடுத்து நிறுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டங்கள் எவ்வாறு ஈவிரக்கமற்ற முறையில் முறியடிக்கப்பட்டன என்பதை அனைவரும் பார்த்தனர் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சில அமைச்சர்கள் இசைநிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்,அந்த நிகழ்ச்சிகளிற்களில் கலந்துகொள்ளுமாறு அவர்கள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஜே.வி.பியின் தலைவர் அரசாங்கத்தின் ஆதரவுள்ள அந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்லக்கூடும் என தெரிவித்துள்ளார்.