ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மரணமடைந்துள்ளார். எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் இவரின் இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த திருமதி லிங்கேஸ்வரி சதீஸ்குமார் (வயது 40) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே மரணமடைந்தவராவார்.
ஒரு விதமான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த குடும்பப் பெண் கடந்த புதன்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
நுரையீரல், சிறுநீரகம் மற்றும் உடலின் ஏனைய பாகங்கள் செயழிழந்த நிலையில் குறித்த பெண் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மரணமான பெண்ணின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வைரஸ் அறிகுறிகளுடன் யாழ்.போதனாவில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.