எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் திகதியை தவிர, தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
தபால் மூல வாக்களிப்பு திகதி தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.