பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வின் கைகளுக்கு' என்ற தலைப்பிடப்பட்ட கடிதமொன்று அலரிமாளிகைக்கு நேற்றைய தினம் கிடைக்கப் பெற்றது.
பாதுகாப்பு பிரிவினர் குறித்த கடிதத்தை பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர். பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரிய பகுதியில் வசிக்கும் 86 வயதான கிராமிய சபையை பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். பீ.ஹேவாஹெட்ட என்பவரினால் இந்த கடிதம் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ளது.
குறித்த கடித உறையை திறந்து பார்த்த வேளையில், அதில் 5000 ரூபா நாணயத் தாள் ஒன்றும், கடிதமொன்றும் இருந்ததை பிரதமர் அவதானித்தார்.
''நான் 86 வயதான ஒருவர். என்னால் நடக்க முடியாது. நான் நோய்வாய்ப்பட்ட நிலையில், கட்டிலில் இருந்தபடி இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.
எதிர்கொள்ளப்பட்டுள்ள அச்சத்துடனான சந்தர்ப்பத்தில், நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்துள்ள சந்தர்ப்பத்தில் மக்களை வாழ வைக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சி வரவேற்கத்தக்கது.
எவ்வாறாயினும், கொரோனா நிதியத்திற்கு என்னுடைய இந்த மாத 5000 ரூபாவை ஏற்றுக்கொண்டு, அந்த புண்ணிய செயற்பாட்டில் என்னையும் ஈடுபடுத்திகொள்ளுமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நீங்கள் எனக்கு செய்த உதவிகளை நான் மறக்க மாட்டேன்' என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தை வாசித்த பிரதமர், சுகயீனமுற்ற நிலையிலும் நாட்டிற்காக தனது கடமைகளை நிறைவேற்ற முன்வந்த ஹேவாஹெட்டவை வரவேற்கும் வகையில், இந்த நிதித்
தொகையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளுக்கு ஹேவாஹெட்டவின் கைகளினாலேயே கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
பிரதமர் செயலாளர் காமினி செனரத்தை உடனடியாக அழைத்த பிரதமர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்ததினத்தன்று, குறித்த நிதித் தொகையை ஹேவாஹெட்டவினால் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். (நன்றி- தமிழன் இ-நாழிதல்)