முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மற்றுமொரு வேட்பாளர் விலகிக்கொண்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலுக்கா ஏக்கநாயக்கவே இவ்வாறு விலகியுள்ளார்.
அவர், முன்னாள் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மாத்தறை மாவட்ட முதன்மை வேட்பாளர் மங்கள சமரவீர, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொண்டார். அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தேசியப் பட்டியலில் நியமனம் வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுவருவதாக அறியமுடிகின்றது.
இதேவேளை, அம்பலாங்கொட தொகுதி ஏற்பாட்டாளர் ஓய்வுபெற்ற மேஜர் டெனட் பனியந்துவ, சஜித் அணியிலிருந்து விலகி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துகொண்டார்.
மூன்றாவதாக நிலுக்கா ஏக்கநாயக்க விலகிக்கொண்டுள்ளார்.
பொதுத்தேர்தலுக்கு முன்னர் சஜித் தலைமையிலான அணியில் பல்வேறான குத்துக்கரணங்களை பார்க்கலாமென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்த நிலையிலேயே மூன்றாவது வேட்பாளரும் போட்டியிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.