web log free
June 02, 2026

நவீனுக்கு புது பதவி

 ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு தேசிய அமைப்பாளர் பதவிக்கு மேலதிகமாக மற்றுமொரு பதவி வழங்கப்பட்டுள்ளது. 

அவரை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக,  ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க பிரிவு நியமித்துள்ளது.

அத்துடன் பொதுச்செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தொழிற்சங்கத்தின் தலைமைப் பதவியை வகித்த ஹரின் பெர்ணான்டோவும், பொதுச்செயலாளராக செயற்பட்ட வடிவேல் சுரேசும் சஜித் அணியில் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவ்விருவருக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சி இடைகால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்நிலையிலேயே மேற்படி பதவிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான மூன்று தொழிற்சங்கங்களுள், ஒன்றாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd