பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் பரிந்துரைக்கப்பட்ட 10 க்கும் மேற்பட்ட வலுவான கட்சி வேட்பாளர்கள் கட்சியை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த வேட்பாளர்களில் மூன்று முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர். சஜித் பிரேமதாசவின் தலைமையில் விரக்தி மற்றும் தேர்தல் வெற்றி குறித்து நிச்சயமற்ற தன்மையில் பணத்தைச் செலவழிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என நினைத்து, அவர்கள் இந்த முடிவை எடுக்க உள்ளனர் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் வேட்புமனுவைக் கைவிடுபவர்களில் மூன்று முன்னாள் எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.