அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பில், பலரும் சிந்திக்கும் வகையிலேயே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விடுக்கப்படும் அறிவிப்பால் வேட்பாளர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
அதாவது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய விருப்பிலக்கத்தை, வீதிகள், மின்சார தூண்கள், பெரிய, பெரிய கற்கல், வீதியோரங்களில் நாட்டப்பட்டிருக்கும் கல், ஆகியவற்றில் எழுதி, பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று கடுமையான அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
அவ்வாறு, எழுத்தப்படுமாயின், எழுதுபவர்களுக்கும் அந்த வேட்பாளருக்கும் எதிராக தேர்தல் சட்டம் பாயும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் அச்சிடப்படும் என அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே கூறியுள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன.