பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ளது. பிரசார நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளன. முக்கிய சந்திப்புகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நாளை (17) புதன்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்பில், ஜனாதிபதியின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தல் செலவுக்கான மேலதிக நிதியை ஒதுக்கிக்கொள்வது தொடர்பிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.