முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடுமையான உள்வீட்டு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.
சஜித் பிரேமதாஸவின் கட்சி “ சஜித் ஜலனி மக்கள் சக்தி” என ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆகையால்தான், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வேட்பாளர்கள் பலரும் விலகுகின்றனர் என்றும் தெரிவிக்கின்றனர்.
தாலியைக் கட்டவேண்டுமாயின் கழுத்தை காப்பாற்றவேண்டும். அதனை அவ்விருவரும் தெரிந்துகொள்வார்களா என்பது தொடர்பில் தெரியவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி செல்வோர் தெரிவித்துள்ளனர்.