எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதியன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எப்போது என்பது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இன்று (16) அறிவிப்பார்.
தேர்தல்கள் தலைமையகத்தில் இன்றுகாலை இடம்பெறும் சந்திப்பின் பின்னரே, இதற்கான அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது.