கொரோனா வைரஸ் காரணமாக, மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி வாகனங்கள் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்டன.
அவ்வாறு, ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவிற்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.