கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், கெப்பத்திகொல்லாவ பிரதேசத்தில் வைத்தே இவர் இனங்காணப்பட்டுள்ளார்.
குவைத்திலிருந்து நாடு திரும்பிய அப்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, அப்பெண் ஹோமாகம வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார். சுகமடைந்து வீட்டுக்கும் அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அப்பெண், அனுராதபுரம் வைத்தியசாலையில் நேற்று (14) மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
அதனால், அப்பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் காய்ச்சல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1905ஆக அதிகரித்துள்ளது.
කොරොනා වෛරසය ආසාදිත කාන්තාවක් අනුරාධපුර කැබතිගොල්ලෑව ප්රදේශයෙන් වාර්තා වී තිබේ.
කුවේට් රාජ්යයේ සිට මෙරටට පැමිණ ඇති කාන්තාවට කොරෝනා ආසාදිත බව හෙලිවීමෙන් පසු හෝමගම රෝහලට ඇතුලත් කර සුව වීමෙන් පසු ඊයේ (14) දිනයේ රෝහලෙන් බැහැර වූ අයෙකි.
එම කාන්තාවට අද දින නැවතත් කොරෝනා රෝග ලක්ෂණ පෙන්වීමත් සමග අනුරාධපුර රෝහලට ඇතුළත් කර තිබිණි.
එහිදී සිදුකරන ලද පරීක්ෂණවලින් ඇය කොරෝනා ආසාදිත බව හෙළිවී තිබේ.
මේ හේතුවෙන් ඇය නැවතත් කොළඹ ජාතික උණ රෝහල වෙත මාරු කර යැවීමට කටයුතු කර ඇත