மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பெயரை “ஹர்ஜான் அலெக்ஸாண்டர்” என மாற்றியுள்ளார்.
இதுதொடர்பில் சர்வதேச பொலிஸார் அறிக்கையி்ட்டுள்ளனர் என கொழும்பு விசேட மேல் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று (16) சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமால் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அர்ஜுன மகேந்திரனின் பெயர் மாற்றம் தொடர்பான சர்வதேச பொலிஸாரின் அறிக்கைக் குறித்து, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த அரச பிரதி சொலிஸிட்டர் நாயகம் பாரிந்த ரணசிங்க நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார்.