எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது தரப்பினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காது என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்கு மேலும் சிலரின் ஆதரவு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
வேறு தரப்பினரின் ஆதரவை பெறாமல் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாற்ற முடியாது.
அந்த அணி தேவையில்லை, இந்த அணி தேவையில்லை என கூறுவதை போல் செயற்பட்டால், 115 முதல் 118 ஆசனங்களை பெற்று அரசாங்கத்தை மாத்திரமே அமைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.