இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான், இன்று (17) நடைபெற்ற இ.தொ.காவின் பேராளார் மாநாட்டில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இ.தொ.காவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து, தலைமைத்துவப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. தலைவர் நியமிக்கப்படும்வரை, இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டு இ.தொ.கா வழிநடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (17) தினம் பேராளார் சபை கூட்டப்பட்டு, ஜீவன் தொண்டமானை பொதுச்செயலார் பதவியில் நியமிக்குமாறு இ.தொ.கா வின் உபதலைவர் செல்லமுத்து ஊடாக பிரேரணை கொண்டுவரப்பட்டது. பிரேரணையை இ.தொகா உபதலைவர் செல்லமுத்து முன்மொழிய மற்றோர் உபதலைவரான ஜெயராம் வழிமொந்தார். இதனையடுத்து பிரேரணை நிறைவேற்றப்பட்டு இ.தொ.காவின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில், இ.தொ.காவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த அனுஷியா சிவராஜா, உபதலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், தலைவர் தெரிவு பிற்போடப்பட்டுள்ளது.