ஆறுமுகன் தொண்டமான் மறைந்ததிலிருந்து இன்றைக்கு வரைக்கும் செலவு செய்யப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வழக்கு காண்பிக்கப்படவேண்டும் என்று காங்கிரஸின் உப-தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பேராளார் கூட்டத்துக்கு உரிய வகையில் தனக்கு அறிவிப்பு விடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள அவர், அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட கூட்டங்கள் மீதும் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் விருப்பத்தின் பிரகாரம், சந்தா பணத்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு ரூபாய் சந்தா பணத்துக்கும் கணக்கு காண்பிக்கப்படவேண்டும். தொழிலாளர் ஒருவரிடமிருந்து 233 ரூபாய், சந்தா பிடிக்கப்படுகின்றது. அதில், எவ்வாறான செலவு செய்யப்பட்டது என்பதுதொடர்பில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை, ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவசரம் அவசரமாக நடத்தப்பட்ட பேராளர் சபை கூட்டம் உள்ளிட்ட கூட்டங்கள் தொடர்பில், அக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் கடுமையான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், உள்வீட்டு முரண்பாடுகள் ஏற்பட்டதுடன், காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.