குழந்தையை பெற்றெடுத்த 14 வயதான சிறுமி, தன்னிடமிருந்து 12 நாட்களான குழந்தையை பிரிக்கவேண்டாம் என்று நீதிமன்றத்தில் மன்றாடிய சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா மேலதிக நீதவான் ஆர்.எஸ்.எம். மகேந்திர ராஜாவிடமே, அந்த சிறுமியான தாய் மன்றாடியுள்ளார்.
14 வய தான அந்த சிறுமியின் தாயாருடைய கள்ளக் காதலானால் சிறுமியும் கர்ப்பிணியாகியுள்ளார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்தபோது, சிறுமியிடமிருந்து குழந்தையை பிரித்து, சரியான பாதுகாவலரிடம் ஒப்படைப்பதற்கு உத்தரவிடுமாறு வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் கோரியிருந்தனர்.
இதன்போது, மேற்படி சிறுமியான தாய், நீதிமன்றத்தில் மன்றாடியுள்ளார். அதனை அவதானித்த நீதவான், இருவரையும் தங்க வைப்பதற்கு தகுதியான இடம் கிடைக்கும் வரையிலும், வைத்தியசாலையில் தங்கவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கர்ப்பத்துக்கு காரணமான சந்தேகநபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இந்த வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதியன்று மீண்டும் அழைக்குமாறும் நீதவான் கோரிக்கை விடுத்தார்.