web log free
December 24, 2024

சார்ஜ் கேபலில் சுய இன்பம் நேர்ந்த கதியை பாருங்க...

பாலியல் சுகத்துக்காக பல்வேறு முறைகளை கையாளுகின்றனர். அதில் சிலர் ஆபத்தான முறைமைகளையும் கையாண்டு சிக்கிக்கொள்கின்றனர். 

இந்தியாவில் பாலியல் சுகத்திற்காக இளைஞன் ஒருவர் பிறப்பு உறுப்பு வழியாக மொபைல் சார்ஜர் கேபிளை செலுத்திக் கொண்டது, மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், தன்னுடைய பாலியல் சுகத்திற்காக கேபிள்கள் மற்றும் பிற பொருட்கள் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி ஒருநாள் மொபைல் போனின் சார்ஜ் கேபிளை உபயோகிக்கும் போது அந்த கேபிள் அவரது சிறுநீரகப்பையில் சிக்கிக்கொண்டது.

இதனால் கடும் வயிற்று வலியில் அவதிப்பட்ட வந்த அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, அங்கு உண்மையை மறைத்து எதிர்பாரதவிதமாக மொபைல் போனின் ஹெட் போனை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எண்டோஸ்கோபியையும் நடத்தியுள்ளனர், ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, அவரது இரைப்பைக் குழாயிலும் எதுவும் இல்லை.

இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள் அப்போதே அவருக்கு ஒரு எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அதில் அந்த நபரின் சிறுநீரகப்பையில் வயர் ஒன்று இருந்துள்ளது.

ஆனால் அது ஹெட் போன் அல்ல சார்ஜர் கேபிள். இதனால் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கிட்டத்தட்ட 2 அடி நீளமுள்ள கேபிளை வெற்றிகரமாக அவரது சிறுநீரகப் பையிலிருந்து அகற்றினர்.

இதையடுத்து குறித்த இளைஞன், தற்போது குணமடைந்து வருகிறார்.

 இந்நிலையில், இது தொடர்பாக அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட நிபுணர் மருத்துவர் வல்லியுல் இஸ்லாம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், 25 ஆண்டுகளாக அறுவை சிகிச்சைகள் செய்து வருகிறேன், ஆனால் இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை நடப்பது இதுவே முதல் முறை.

நோயாளி செய்தது ஒரு வகை ஆபத்தான சுயஇன்பம் ஆகும். ஒரு பொருள் அல்லது திரவத்தை சிறுநீர்க்குழாயில் செலுத்துவதாகும். அந்த நபர் கேபிளை சொருகி 5 நாட்களுக்குப் பிறகுதான் எங்களிடம் வந்துள்ளார்.

மேலும் அவர், நேயாளி தங்களிடம் உண்மையைச் சொல்லியிருந்தால், அவர் அதைச் சொருகிய அதே வழியில் கேபிளை அகற்றியிருக்கலாம் என்றும் ஆனால் அவர் பொய் சொன்னதால்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Friday, 19 June 2020 00:59
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd