web log free
December 24, 2024

இந்தியருக்கு கொரோனா- இலங்கையில் சிக்கினார்

கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட இந்திய பிரஜை ஒருவர், கட்டாரிலிருந்து இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கடற்படையைச் சேர்ந்த மேற்படி நபரும் மேலும்  69 பேரும்; கடந்த 17 ஆம் திகதி, மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.

இவர்களில் 54 பேர் கொழும்பு தறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக இணைக்கப்பட்டதுடன், ஏனைய 15 பேர் கட்டாருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 

இவ்வாறு அனுப்பப்பட்வர்களில் மேற்படி நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அங்கு வைத்து  அவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அவர் மீண்டும் இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

சர்வதேச விமான பயணச் சட்டத்துக்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேற்படி நபரை இந்தியாவின் மும்பை நகருக்கு அனுப்பி வைக்க முடியாத நிலையில், அவருக்கு கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில்  சிகிச்சையளிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd