சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரம், இன்று ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிய விகாரையில், வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். வழிபாடுகளையடுத்து சர்வமதப் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ள அக்கட்சியினர், அதன் பின்னர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில், இலக்கம் 17இல் களமிறங்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அம்மாவட்டத்துக்கான தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்ததன் பின்னர், தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்து வைப்பார் என, அக்கட்சி அறிவித்துள்ளது.