web log free
December 24, 2024

கோத்தாவின் பிறந்தநாளில் படையினருக்கு பதவியுயர்வு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.

1949 ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த கோத்தாபய ராஜபக்,ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராவார்.

இராணுவ அதிகாரியாக சேவையாற்றிய அவர் பின்னர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டு 30 வருட கொடிய யுத்தத்தை நிறைவு செய்வதற்கு பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

பின்னர் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு மேலதிகமாக நகரபுற அபிவிருத்தி செயலாளர் பதவியை வகித்து யுத்தத்தின் பின்னர் நகர அலங்கார மற்றும் நகர்புற அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை பெற்றுக் கொடுத்து சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்திருந்தார்.

கடந்த வருடத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்ற கோத்தாபய ராஜபக்ஷ இந்நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இராணுவத்தில் கேர்ணல் பதவி வகித்த 41 பேர் பிரிகேடியர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன், லெப்டினன் கேர்ணல்  பதவி வகித்த 30 பேர் கேர்ணலாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd