வத்தளை, திக்கோவிட்ட கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் உள்ளிட்ட நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
திக்கோவிட்ட மயானத்துக்கு முன்பாகவுள்ள கடற்பிராந்தியத்தில் நேற்று (20) மாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
இந்த நிலையில், ஐவரும் நீரில் மூழ்கியதை அடுத்து கடற்படையினரும் பிரதேச மக்களும் இணைந்து அவர்களை மீட்டு ராகமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய மற்றுமொரு பெண், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
வத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.