web log free
May 09, 2025

நயினாதீவு ஆலயத்துக்குள் காலணியுடன் நின்ற பொலிஸார்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் ஆலயத்துக்குள் பொலிஸார் மற்றும் கடற்படையினர் காலணியுடன் கடமையில் நின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனோ காரணமாக நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் மட்டுமே ஆலயத்தினுள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அம்மனின் கொடியேற்ற நிகழ்வை நேரில் கண்டுகழிக்க வந்திருந்த பலரும் ஆலய வெளி வீதியில் அமைந்துள்ள வாயில் கதவுகளை பூட்டி பொலிஸார் தடுத்து நிறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் ஆலயத்தினுள் பொலிஸாரும் கடற்படையினரும் காலணிகளுடன் கடமையில் இருந்தமை தொடர்பில் பலரும் நேரில் அவர்களுக்கு அறிவுறுத்திய போதிலும் அதற்கு அவர்கள் செவி கொடுக்காது கடமையில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd