ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வலது கையைப்போல செயற்பட்டவரே லக்ஷ்மன் கிரியெல்ல ஆவார்.
இறுதி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கண்டி மாவட்டத்தில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
எனினும், இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடையும் என்று தெரிவித்துள்ளார்.
ரணிலை சுற்றி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 க்கும் குறைவானவர்களே உள்ளனர். ஆகையால் ஐ.தே.க வெல்வது கடினமானது என்று லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ரணிலை இறுதி வரையிலும் காப்பாற்றியவர் லக்ஷ்மன் கிரியெல்ல. அவரே இப்படி கூறியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பேசும் பொருளாக உள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட லக்ஷ்மன் கிரியெல்ல, கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சபை முதல்வர் பதவியையும் பெருந்தெருக்கள் உள்ளிட் முக்கியமான அமைச்சுப் பதவிகள் சிலவற்றையும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.