கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், நாடு கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்கு திரும்பிகொண்டு வருகிறது.
ஞாயிறுக்கிழமை விடுமுறை தினம் என்பதனால் பொது இடங்களில் மக்கள் கொஞ்சம் அதிகமாகவே உலாவுகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் நேற்று (20) பதிவாகவில்லையென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 1950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி தொற்றாளர்களிடையே 1472 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில், 467 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.