web log free
December 24, 2024

ஹஜ் யாத்திரர்களுக்கு சவுதி தடைவிதிப்பு

கொரோனா ​தொற்று காரணமாக, வெளிநாடுகளிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

அத்துடன் சவுதியில் மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே ஹஜ் யாத்திரைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சமூக இ​டைவெளியும் பேணப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வருடாந்தம் 2.5 மில்லியன் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்கு செல்வதுடன், இதன் மூலம் 12 பில்லியன் டொலர்கள் வருமானத்தையும் சவுதி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd