பாகிஸ்தான் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது
பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படவிருந்த மூன்று டெஸ்ட், மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடருக்காக, பாகிஸ்தான் அணி நாளை இங்கிலாந்து புறப்பட உள்ளது.
இந்த நிலையில், அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.