கருணா தெரிவித்திருப்பது போன்று 3000 இராணுவத்தினரை அவர் கொலை செய்யவில்லை என முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும் அவர் கொலை செய்தார் என்பது உண்மை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் தெரிவித்திருப்பது போன்று ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் அவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இராணுவத்தினரை அவர் கொலை செய்யவில்லை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்தேன் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர் பெரும் வீரராக முயல்கின்றார் ஆனால் அவர் சரணடைந்த வீரர்களையே கொலை செய்தார் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ரீலங்கா பொதுஜனபெரனமுன கருணாவிற்கு பதவி வழங்கியுள்ளது அரசாங்கம் அவரை காப்பாற்றுகின்றது எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கருணாவை சிறையில் அடைக்கவேண்டும் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.