web log free
November 05, 2025

மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் இறைபதம் எய்தினார்

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார்.

தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.

நீண்டகாலமாக இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றி இருந்தார்.

இவர் திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகராவார்.

´ஒதெல்லோ´, ´நத்தையும் ஆமையும்´ முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.

ரூபவாகினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய ´கற்பனைகள் கலைவதில்லை´ என்ற நாடகத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd