பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசியமை பெரும் பரப்பரப்பான சம்பவமாகும்.
அந்த மிளகாய்த்தூளை வீசிய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர புது விளக்கத்தை கொடுத்துள்ளார்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசியதாக அவர் தெரிவித்தார்.
மக்களால் நான் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, பாலித தெவரப்பெரும 2016ஆம் ஆண்டு 05ஆம் மாதம் 03ஆம் திகதி அன்று பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை அழிக்க ஆயுதங்கள் கொண்டு வந்தாக தெரிவித்தனர்.
இந்நிலையில், தான் ஜனநாயகத்தை பாதுகாக்க மிளகாய்த் தூள் கொண்டு தாக்கியதாக அவர் ஊடக சந்திப்பில் இவ்வா தெரிவித்தார்.