அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராயும் மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கை நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எம.சி.சி. உடன்படிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த அறிக்கை இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து, இந்த அறிக்கை பிரதமரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராய்வதற்காக பேராசிரியர் லலிதஸ்ரீ தலைமையிலான குழுவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார்.
குறித்த குழு கடந்த 6 மாதங்களாக இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்தது. ஆத்தோடு இந்த விடயம் தொடர்பாக பல்வேறு துறையினரிடமும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கேட்டறிந்து, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.