web log free
June 27, 2026

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலையும் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை, 103 ரூபாயாகும்.

ஒக்டேயின் 95 ரக பெற்றோலின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 155 ரூபாயாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை, 126 ரூபாயாகும்.

எனினும் ஒக்டேயின் 92 ரக பெற்றோலின் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd