முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிக்கு கடும் முரண்பாடுகள் நிலவுகின்றன.
கட்சியின் உப-தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாள நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலேயே இந்த முரண்பாடுகள் நிலவுகின்றன.
இருவரும் வெற்றிடமாக அருக்கும் பிரதித் தலைவர் பதவியை எதிர்பார்த்து அதற்கான காய்நகர்த்தலை முன்னெடுக்கின்றனர் என அறியமுடிகின்றது.
தற்போது வெற்றிடமாக இருக்கும் பிரதித் தலைவர் பதவியை வகிப்பதற்கு உபதலைவரான தனககு தகுதி இருப்பதாக ரவி கருணாநாயக்க பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “உயர்ந்த மனிதன்” ஜனாதிபதி வேட்பாளராக ஆவதற்கு எதிர்பார்த்துள்ளார் என நவீன் திஸாநாயக்க பகிரங்கமாக தெரிவித்துவிட்டார்.
இதனால், இவ்விருக்கும் இடையிலான சண்டை வீதிக்கு வந்து அம்பலமாகிவிட்டது.