ஒவ்வொரு முறையும் விடிய,விடிய கண்விழித்து இருந்தோருக்கு இம்முறை ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், இம்முறை கண்ணயர்ந்து நன்றாக தூங்கவேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில், வாக்கெண்ணும் நடவடிக்கைகள் மறுநாள் காலை 8 மணிக்கே ஆரம்பமாகும்.
முதலாவது பெறுபேறு, அன்றையதினம் 4 மணிக்கு வெளியிடப்படும்.
அன்றிரவு 10 மணிக்கு முன்னர், இறுதிப் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆகையால், கடந்த தேர்தல்களை போல, கண் விழித்திருந்து பெறுபேறுகளுக்காக காத்திருக்கவேண்டிய அவசியம் யாருக்கும் இம்முறை இல்லை என்றார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு பெறுபேறு, வாக்களிப்பு தினத்தன்று, நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.