பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தீவிரவாதிகள் இல்லாத நாடாளுமன்றம் உருவாக்கப்படும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அத்தகைய தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யாமலிருப்பதை உறுதி செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவு அவசியம் என்றும் தெரிவித்தார்.
மேலும் அடுத்த 50வருடங்களிற்கு நாடாளுமன்றத்திற்கு தீவிரவாதிகள் தெரிவு செய்யப்படாத நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கும் என்றும் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள் மற்றும் மலாய் என அனைத்து சமூகங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று தெரிவித்த அவர் ஆனால் தீவிரவாதிகளிற்கு ஒருபோதும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.