இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமை மீண்டும் திறக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.
நவுரு மற்றும் மானஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சுகவீனமுறும் போது, அவர்கள் அவுஸ்தரேலியாவிற்கு சென்று மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்று அந்த நாட்டின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மூலத்துக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த போதும் இது பயனளிக்கவில்லை.
எதிர் கட்சிகளான பசுமை கட்சியும், தொழிற்கட்சியும் இணைந்து இந்த சட்ட மூலத்தை வெற்றிப்பெறச் செய்துள்ளன.
இந்த நிலையில், அகதிகளுக்கான மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிறிஸ்மஸ் தீவு முகாமை மீளத் திறக்கவிருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.